Kajang அருகிலுள்ள Balakong, Kajang Silk நெடுஞ்சாலையில் கார் மீது மோதி இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.
நேற்று காலை 8.20 மணியளவில் சம்பந்தப்பட்ட காரின் ஓட்டுநர், கார் கண்காட்சி மையத்தில் தனது வாகனத்தை நிறுத்திய பின் ஹேண்ட் பிரக் – கை சரியாக இழுக்க தவறியதை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக Kajang மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Mohd Zaid Hassan தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கார் தானாகவே பின்புறம் நோக்கி சென்றதாகவும் சாலையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அதை தவிர்க்க முற்பட்ட வேளை அக்காரின் இடது பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதாக அவர் தகவல் அளித்தார்.