நாட்டின் கடல் உணவுகளை அறுவடை செய்வதற்கு உள்ளூர் படகுகளை பயன்படுத்தி வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் சில சிண்டிகேட்டின் தந்திரமான செயல்பாடு அம்பலமானது.
இதை தொடர்ந்து, நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் சந்தேகத்திற்குரிய தாய்லாந்து Kepten உட்பட ஐந்து பணியாளர்களை ஏற்றி சென்ற உள்ளூர் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.
Tok Bali – யிலிருந்து 37 ஆவது கடல் மைல் தூரத்தில் சம்பந்தப்பட்ட படகு தடுத்து நிறுத்தப்பட்டதாக Kelantan, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறையின் Kepten Erwan Shah Soahdi தெரிவித்தார்.
மேலும், 36 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய கப்பலின் Kepten உட்பட சம்பந்தப்பட்ட பணியாளர்களும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக Tok Bali – யில் உள்ள மலேசிய கடல்சார் படகு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக Erwan Shah கூறினார்.