சரவாக்- கிலிருந்து 29 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் உள்ள Sungai Baron ஆற்றில் உடலில் ஆடை ஏதுமின்றி மூதாட்டி ஒருவரின் உடல் மிதந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
62 வயது Lenya Sigat என்ற அந்த மூதாட்டியின் உடல் இன்று காலை 10.35 மணியளவில் அவர் காணாமல் போன இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தேடல் மற்றும் மீட்பு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டதாக Sarawak தீயணைப்பு நடவடிக்கையின் செயல்பாட்டு மையத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தகவல் அளித்தார்.