உரக்க குரலில் வாசிக்கும் போட்டியானது மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும்

கோலாலம்பூர், மலேசிய சுற்றுலா மையம், துங்கு அப்துல் ரஹ்மான் ஹால்- னில் நேற்று நடைபெற்ற உரக்க குரலில் வாசிக்கும் போட்டியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்.

தேசிய நூல்நிலையத்தின் ஒத்துழைப்புடன் தேசிய ஒற்றுமை அமை‌ச்சக‌த்தின் ஏற்பாட்டில் நிகழ்ந்த 2024 ஆம் ஆண்டிற்கான உரக்கமாக வாசிக்கும் போட்டியானது இவ்வாண்டின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

சத்தமாக, உரத்த குரலில் வாசிக்க வேண்டும் என்ற கருத்தை கொண்ட இந்தப் போட்டியானது, திறமையான பாலர்பள்ளி குழந்தைகளுக்கு அவர்களின் வாசிப்பு திறன், குரல் வளம் உட்பட வாசிப்பு கலாச்சாரத்தின் ஆழமான அர்த்தம் ஆகியவற்றை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளமாகும் என்றார் துணை அமைச்சுர் சரஸ்வதி கந்தசாமி.

வாழ்நாள் முழுவதும் கற்றல், பங்கேற்பாளர்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பது, வாசிப்பு பயிற்சியை மேம்படுத்துதல் மற்றும் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வெளிக்கொணர வைப்பதுவே இப்போட்டியின் பிரதான நோக்கம் என்கிறார் சரஸ்வதி கந்தசாமி.

இப்போட்டி கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரையில் ஒரு மாதக் கால போட்டியாக நடைபெற்று வந்ததுடன் பாலர்பள்ளியை சேர்ந்த 140 மாணவர்கள் மற்றும் மலேசியா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 10 மாணவர்கள் கொண்ட பாலர் பள்ளிகள் இதில் இடம்பெற்றன.

மேலும், தேசிய ஒற்றுமை அமை‌ச்சக‌ம், கல்வி அமை‌ச்சக‌ம், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் உட்பட பள்ளி மாணவர்கள் என்று மொத்தம் 400 பார்வையாளர்கள் வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கையில் நேற்று பங்கேற்றனர்.

WATCH OUR LATEST NEWS