பினாங்கு, ஜூன் 10-
பினாங்கு, புலாவ் திக்குஸ் போலீஸ் நிலையத்தின் மூன்று போலீஸ்காரர்கள் ஒரு கைப்பையில் ரொக்கத் தொகையுடன் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லான் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு ஏதுவாக அவர்கள் தடுக்கப்பட்டு தற்போது புலன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். 29, 34, 35 வயதுடைய அந்த மூன்று போலீஸ்காரர்கள்ள் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறி பிரிவு இலாகாவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.