கோலாலம்பூர், ஜூன் 10-
தனது வங்கி கணக்கில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு லட்சத்து 14 ஆயிரம் வெள்ளி வரவு வைக்கப்பட்டு இருப்பது குறித்து விளக்கம் அளிக்கத் தவறிய வீட்டு சீரமைப்பு குத்தகையாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
37 வயது முஹம்மது சாதிக் நமான் என்ற அந்த குத்தகையாளர் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மூன்று மாதசிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி அஸ்ருல் தாருஸ் உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட குத்தகையாளர் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி பத்து கேவ்ஸ், தாமான் கோபராசி போலீஸ்- ஸில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.