ஓட்டுநர் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது

மலாக்கா, ஜூன் 10-

மலாக்கா, மஸ்ஜித் தானா, ஜெராம், தேசிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பயணம் செய்த பேருந்து ஒன்று , நேற்று ஞாயிற்றுக்கிழமை பஹாவ், முவாத்சாம் ஷா சாலை சந்திப்புக்கு அருகில் ஜாலான் குவாந்தன் – செகாமட் சாலையில் தடம்புரண்டு, நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவத்தில் அந்த பேருந்து ஓட்டநரின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அஸ்மான் யூசோப் தெரிவித்தார். 50 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற போதிலும் அந்த ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளரா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த பேருந்து மலையொன்றிலிருந்து கீழே இறங்கிகொண்டு இருந்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை மோதி தடம் புரண்டது. இதில் நான்கு ஆசிரியர்கள் உயிரிழந்த வேளையில் 35 பேர் காயமுற்றனர்.

WATCH OUR LATEST NEWS