மின்சார ஸ்கூட்டர்- ரில் தம்பதியர் பயணமா?

கோலாலம்பூர், ஜூன் 10-

கோலாலம்பூர் மாநகரில் மிக பரபரப்பான பகுதியான புக்கிட் பிண்டாங்- சாலையில் ஒரு தம்பதியர், மின்சார ஸ்கூட்டர்- ரில் பயணம் செய்வது போல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பரபரப்பான வாகனப் போக்குவரத்து மத்தியில் அந்த தம்பதியர் ஒய்யாரமாக சாலை நடுவே மின்சார ஸ்கூட்டர்-ரில் நின்றுக்கொண்டு பயணம் செய்யும் காட்சி பலரது கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது.

அந்த தம்பதியர் செயல், அவர்களுக்கு மட்டுமின்றி, சாலையைப் பயன்படுத்தும் இதர வாகனமோட்டிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து புலன் விசாரணைப்பிரிவின் தலைமைப் போலீஸ் அதிகாரி ஏசிபி சரிபுதீன் முகமது சலே தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS