திருமண கண்காட்சிக்கு கவன ஈர்ப்பு

ஷாஹ் அலாம், ஜூன் 10-

ஷா அலாம், IDCC மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த மூன்று நாள் கிராண்ட் இந்தியன் வெட்டிங் எக்ஸ்போ 2024 – யில் மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்தது ஆட்டிசம் நட்சத்திர சிறார்களின் பாடல்திறன் படைப்பாகும்.

வெட்டிங் பிவேர் ஒருங்கிணைப்பில் திருமண ஏற்பாட்டிற்கான சேவைகளை வழங்கும் 30 க்கும் மேற்பட்ட தொழில்திறன் வல்லுநர்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த கண்காட்சியில் ட்லாக்ஸ் அவென்யூ -வை சேர்ந்த நூர் ஷுஐபா, ஷஞ்சேவ் ராம், குகேந்திரன் தங்கதுரை, ஜோயல் ஜோஷ்வா, சஞ்சனா முருகன், மற்றும் தேஜல் ஆகியோர் பங்கு கொண்டு தங்கள் பாடல்திறனை வெளிப்படுத்தியது பலரை பரவசத்தில் ஆழ்த்தியது.

கிராண்ட் இந்தியன் வெட்டிங் எக்ஸ்போ 2024 – யின் ஏற்பாட்டாளரும் வெட்டிங் பிவேர் உரிமையாளருமான GK பசுபதி, DVV ஈவென்ட் மேனேஜ்மென்ட் தோற்றுநரும் இயக்குநருமான டத்தோ விக்னஸ் வீரா,பெர்சமா தோற்றுநரும் தலைவரும், ட்லாக்ஸ் அவென்யூ இயக்குநருமான திலா லக்ஷ்மன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பாடகர் மைக்கேல் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த autism நட்சத்திர சிறார்களின் பாடல்திறன் படைப்பு அற்புதமான கிராண்ட் இந்தியன் வெட்டிங் எக்ஸ்போ 2024 நிகழ்விற்கு முத்தாய்ப்பாக அமைந்ததுடன் பங்கேற்ற ஆறு சிறார்களும் பார்வையாளர்களின் அபரிமித பாராட்டுகளை பெற்றனர்.

WATCH OUR LATEST NEWS