எரிந்து கொண்டிருந்த காரில் ஆடவரின் சடலம்

பாகன் செராய், ஜூன் 10-

பாகன் செராய்- சீன இடுகாடு ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்த கார் ஒன்று, தீப்பற்றிக் கொண்டதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை அனைத்து காரை சோதனையிட்ட போது சடலம் ஒன்றை கண்டு பிடித்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் அந்த சீன இடுகாட்டின் ஒரு காலியான கட்டடத்தின் முன் நிகழ்ந்தது. இதில் புரோட்டான் ஈஸ்வரா- கார் கிட்டத்தட்ட 50 விழுக்காடு அழிந்ததாக பேரா மாநில தீயணைப்பு,மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

ஓட்டுநர் இருக்கையில் இறந்து கிடந்த அந்த நபர் ஆணா, பெண்ணா என்பது உடனடியாக தெரியவில்லை. விசாரணைக்கு ஏதுவாக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபரோட்ஸி நோர் அகமது குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS