கோலாலம்பூர், ஜூன் 10-
நாளை முதல் 30,000 டீசல் வாகன உரிமையாளர்கள் 200 வெள்ளி மாதாந்திர உதவித் தொகையை புடி மடானி – யிடமிருந்து பெறுவர்.
டீசலுக்கான இலக்குரிய உதவித்தொகையை பெறுவதற்கு எந்தவொரு இறுதி நாள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் புடி இண்டிவிடு அல்லது புடி அக்ரி – கொமோடித்தி இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
அதே இணையத்தளத்தின் மூலம் மறுபரிசீலனை அல்லது மேல்முறையீடு விண்ணப்பம் செய்யலாம் என்று அமீர் ஹம்சா தெரிவித்தார்.