கெடா, ஜூன் 10-
கெடா, குலிம்-மில், பாலிங்-ங்கை நோக்கி செல்லும் BKE நெடுஞ்சாலையின் 21ஆவது கிலோமீட்டரில், டிரெய்லர் உள்ளிட்ட 13 வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த சாலை விபத்தில், நால்வர் படுகாயமடைந்தனர்.
இன்று காலையில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், இதர வாகனங்களை டிரெய்லர் மோதி தள்ளியதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அச்சம்பவம் குறித்து காலை மணி 7.37 அளவில் அவசர அழைப்பை பெற்ற, குலிம் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆயினும், அவர்கள் வருவதற்குள் விபத்தில் சிக்குண்டவர்களைப் பொதுமக்கள் காப்பாற்றினர்.
பின்னர், காயமடைந்தவர்கள், மேல்கட்ட சிகிச்சைக்காக குலிம் மருத்துவமனைக்கு மருத்துவ அவசர ஊர்தி வழி அனுப்பப்பட்ட வேளை, தீயணைப்பு மீட்பு வீரர்கள் சாலையை தூய்மைப்படுத்தியதோடு, போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப உதவினர்.