பகாங், ஜூன் 10-
பகாங்-ங்கில் நேற்று 45 எண்ணெய் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதணைகளில், அரசாங்கத்தின் உதவித் தொகை வழங்கப்பட்ட டீசலை கடத்தும் இரு நடவடிக்கைகளை அம்மாநிலத்திற்கான உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின மீதான அமைச்சு முறியடித்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில், மூவர் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் ஜெஸ்லிலி ஜமாலுதீன் தெரிவித்தார்.
முறையான உரிமம் இன்றியும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியும் அவர்கள் அனைவரும் டீசலை கொள்கலனில் நிரப்பிக்கொண்டிருந்த போது பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து ஆயிரத்து 354 வெள்ளி மதிப்புடைய 630 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டன.
டொயோட்டா ஹைலக்ஸ், டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட வாகனங்களும் டீசலை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி டீசலை விற்ற எண்ணெய் நிலையத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக, ஜெஸ்லிலி ஜமாலுதீன் கூறினார்.