நாட்டில் புதிய பல்லின கட்சி உதயமாகியுள்ளது.

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11-

நாட்டில் பெர்சத்து சாசா மலேசியா எனும் பெயரில் புதிய பல்லின கட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

பெர்சாமா என்று சுறுக்கமாக அழைக்கப்படும் அக்கட்சியின் தலைவராக வர்த்தகர் டேனியல் மார்னோகரன் அப்துல்லா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது உள்ள உயரடுக்கு நிலையிலான அரசியலுக்கு சவால் விடுக்கும் நோக்கில், தொடங்கப்பட்டுள்ள தங்கள் கட்சியில் உறுப்பினராக இணைவதற்கு, ஒருவரின் அந்தஸ்து, பின்புலம் எதுவும் பார்க்கப்படாது என டேனியல் கூறினார்.

மக்களுக்கு சேவையாற்ற விரும்புவோருக்கு தங்கள் கட்சி இடமளிப்பதோடு, வாரிசு அரசியலுக்கு இடமிருக்காது.

தற்போதைக்கு இதர அரசியல் கூட்டணியில் இணைவது, தங்களது முதன்மை எண்ணம் இல்லை. மக்களின் தேவைகள் குறித்து குரல் எழுப்புவதோடு, நாட்டின் நிர்வாகம் முறையாக இயங்குவதை உறுதிபடுத்தக்கூடிய மூன்றாவது சக்தியாகவே தங்கள் கட்சி விளங்கும்.

கட்சியை வழிநடத்துவதில் நிதி தேவை உள்ளதால், பொதுமக்களிடம் நிதி ஆதரவு கோரப்படும் என கூறிய டேனியல் , கட்சியின் பதிவுக்காக, தேசிய சங்கப் பதிவகத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS