பொருளக கணக்குகள் முடக்கத்திற்கு எதிராக துன் டைம் ஜைனுதீன்-னும் அவரது குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கோலாலம்பூர், ஜூன் 11-

முடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களது பொருளக கணக்குகளை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி, நிதி முன்னாள் அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்-னும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இம்மாதம் 6ஆம் தேதி டைம் ஜைனுதீன், அவரது மனைவி, நான்கு பிள்ளைகள், 18 நிறுவனங்கள் என மொத்தம் 24 பேர், அந்த மனுவை பதிவு செய்துள்ளனர்.

அன்வார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை தவிர, அவ்வாணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, மலேசிய அரசாங்கம் ஆகியற்றையும், அந்த மனுவில் பிரதிவாதிகளாக அவர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளக கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதால், தங்களது வர்த்தக நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாகவும் அந்நடவடிக்கை சட்டப்படி செல்லாது எனவும் தங்களது மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

சொத்து விபரங்களை அறிவிக்கும்படி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கிய உத்தரவை கடைப்பிடிக்க தவறியதற்காக, டைம் ஜைனுதீன்-னும் அவரது மனைவியும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்கி வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS