பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11-
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பினாங்கு, சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் PKR சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அமினுதீன் பாக்கி கல்விக் கழகத்தின் வட பிராந்தியத்திற்கான முன்னாள் இயக்குநர் ஜோஹாரி அரிஃபின்- னை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய இஸ்லாமிய இளைஞர் அமைப்பான ABIM- மின் உறுப்பினர் என்ற பின்னணியை கொண்டுள்ள ஜோஹாரி அரிஃபின்-சுங்கை பக்காப் இடைத் தேர்தலில் நிறுத்தப்படுவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வரும் வேட்பாளர்களில் முதன்மையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று தவணைக் காலம், PKR கட்சியின் கோட்டையாக விளங்கிய Sungai Bakap சட்டமன்றத் தொகுதி, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் PAS கட்சி வசமானது.
அத்தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு பாஸ் கட்சி, சமயப் பின்னணியை கொண்ட ஒரு வேட்பாளரை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு ஈடாக கல்விப் பின்புலத்தை கொண்ட வலிமைப் பொருந்திய வேட்பாளராக PKR சார்பில் ஜோஹாரி அரிஃபின்- நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.