பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11-
டீசல் விலை உயர்வின் எதிரொலியாக சிமெண்ட் மிக்சர் லாரிகள் மற்றும் இழுவை வாகனங்கள் நடத்துநர்கள், தங்களின் போக்குவரத்து சேவைக்கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசாக விற்கப்பட்ட டீசல், நேற்று முன்தினம் பின்னிரவுக்கு பிறகு ஒரு வெள்ளி 20 காசு உயர்த்தப்பட்டு, h 3 வெள்ளி 35 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு , வரலாறு காணாத விலையேற்றமாகும். இந்த விலையேற்றத்தைத் தொடர்ந்து கட்டமானத் தளங்களுக்கு குலைக்கப்பட்ட சிமெண்டை ஏற்றிச்செல்லும் சிமெண்ட் மிக்சர் லாரிகள் மற்றும் பழுதடைந்த அல்லது விபத்துக்குள்ளான வாகனங்களை இழுத்துச் செல்லும் இழுவை லாரிகள் தங்கள் சேவைக்கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக அறிவித்துள்ளன.
தங்களின் சேவைக்கட்டணத்தை உயர்த்திருப்பதை குறைந்தது இரண்டு சிமெண்ட் மிக்சர் நிறுவனங்களான DPG Readymix Sdn. Bhd. மற்றும் LCS Marketing Sdn. Bhd. ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளன.
இலக்கிடப்பட்டவர்களுக்கு டீசல் உதவித் தொகை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு இலக்காகியிருப்பதாக அவை தெரிவித்துள்ளன.
டீசல் உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியானவர்களுக்கு Fleet Card அட்டை வழங்கப்படுகிறது.
அந்த அட்டையை பெறுவதற்கு தங்கள் நிறுவனங்கள் தகுதிபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சேவைக்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கிளந்தானை தளமாக கொண்டுள்ள DPG Readymix நிறுவனத்தின் பேச்சாளர் கூறுகிறார்.