கடந்த ஜுன் 3 ஆம் தேதி, குவந்தானில் எண்ணெய் நிலையத்தில் நிறத்தப்பட்டிருந்த பெண் கணக்காய்வாளர் ஒருவருக்கு சொந்தமான ஹோண்டா சிட்டி காரை மின்னல் வேகத்தில் திருடிச் சென்றதாக நம்பப்படும் ஆடவருக்கு எதிரான தடுப்புக்காவலை போலீசார் நீடித்துள்ளனர்.
குவந்தான், சுங்கை இசப் என்ற முகவரியை சேர்ந்த அந்த சந்தேகப் பேர்வழி போதைப்பொருள், குற்றவியல் தொடர்பாக ஏற்கனவே 6 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சிறையிலிருந்து வெளியேறியதாக தெரியவந்துள்ளது என்று குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் போது, அந்த ஹோண்டா சிட்டி காரில் அமர்ந்திருந்த அந்த பெண் கணக்காய்வாளரின் வயோதிகப் பெற்றோரை , அந்த சந்தேக நபர், பாதி வழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
இதில் அவர்கள் காயம் அடையவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.