அண்மையில் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கைகளில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் 49 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் வழி இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
தெற்கு கிள்ளான், சுபாங் ஜெயா மற்றும் ரவாங் ஆகிய பகுதிகளில் கடந்த ஜுன் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு, இரண்டு நாள் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய நபர்கள் கைது செய்யப்பட்டன. இதன் வழி கடந்த மூன்று முதல் 6 மாதங்கள் வரையில் செயல்பட்டு வந்த இரண்டு கும்பல்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.