சுயமாக சுட்டுக்கொண்டதில் சுங்கத்துறை அதிகாரி படுகாயம்

தன்னை தானே சுட்டுக்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அரச மலேசிய சுங்கத்துறை அதிகாரி ஒருவர், படுகாயத்திற்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் பிறை, சுங்கத்துறை கட்டடத்தின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்தது.

42 வயதுடைய அந்த சுங்கத்துறை அதிகாரி, கெடா, கூலிமில் உள்ள குறிசுடும் பயிற்சிக்கு செல்வதற்கு தயாராக இருந்த வேளையில் கார் நிறுத்தும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் அந்த அதிகாரி செபராங் ஜெயா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவரின் உடல் நிலை குறித்து இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS