சிரம்பான், ஜாலான் லாமா சென்டாயானில் இன்று காலை 11.40 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். அவர செலுத்திய கார், மற்றொரு வாகனத்துடன் மோதியதில், அந்த வெளிநாட்டுப் பெண்மணி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் ஆடவர் ஒருவரின் புரோடுவா மைவி காரும், இரண்டு பிலிபைன்ஸ் பெண்கள் பயணம் செய்த புரோடுவா கான்சில் காரும் சம்பந்தப்பட்டு இருந்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்தது.
இதில் புரோடுவா கான்சில் காரை செலுத்திய பிலிப்பைன்ஸ் பெண் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவருடன் பயணம் செய்த மற்றொரு பெண் கடும் காயங்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.