கோம்பாக், சுங்கை சின்சின் சமயப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பிஹூன் மற்றும் பொறித்த முட்டை விஷத்தன்மையாக மாறி, அதனை உண்ட மாது ஒருவரும், 2 வயது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
அந்த நிகழ்விற்கு உணவு விநியோகம் செய்த கேத்ரிங் நடத்துநர், நிகழ்வில் ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.
இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர். உணவை விநியோகம் செய்த பள்ளி கண்டீனை மூடும்படி சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக அறியப்படுகிறது என்று டத்தோ உசேன் உமர் மேலும் விவரித்தார்.