34 கோடி அமெரிக்க டாலர் பணத்தில் ஆடம்பரப் பொருட்களை வாங்கினார்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், கடந்த 2010 ஆம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 34 கோடியே 60 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் பலதரப்பட்ட ஆடம்பரப் பொருட்களை பெற்றுள்ளார் என்று 1 எம்.டி.பி நிறுவனம் கூறுகிறது.

14 வெவ்வேறு அதிகாரத்துறையில் 48 விற்பனையாளர்களிடமிருந்து மேற்கண்ட ஆடம்பரப் பொருட்களை ரோஸ்மா பெற்றுள்ளார் என்று அந்த நிதியகம் கூறுகிறது.

தற்போது காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் நஜீப்பின் துணைவியாருக்கு எதிராக 34 கோடியே 60 லட்சம் வெள்ளியை கோரி, அவர் மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் 1 எம்.டி.பி வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கு மனுவில் மேற்கண்ட விவரங்களை 1 எம்.டி.பி தெரிவித்துள்ளது.

முதலீட்டுத் திட்ட நோக்கத்திற்காக 1 எம்.டி.பி நிதி உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த நிதி முறைகேடான வழியில் ஐந்து கட்டங்களாக மோசடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு இவ்வழக்கின் முதலாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரோஸ்மா, அந்த நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று தனது வழக்கு மனுவில் 1 எம்.டி.பி குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS