டீசல் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி பேருந்து, விரைவு பேருந்து மற்றும் சுற்றுலா பேருந்து ஆகியவற்றின் பயணக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.
இந்த மூன்று பிரிவு வாகனங்களும், டீசல் எண்ணெய் விலை உயர்வில் பாதிக்கப்படவில்லை. அவற்றுக்கு டீசல் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது டீசல் விலை லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கு விற்கப்படுகிறது. பள்ளி பேருந்து, விரைவு பேருந்து மற்றும் சுற்றுலா பேருந்து ஆகியவற்றின் நடத்துநர்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ஒரு வெள்ளி 88 காசுக்கு விற்பனை செய்வதற்கு Fleed Card வழங்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.