ஜோகூர் மாநிலம் முழுவதும் ஏககாலத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டு, நேற்று திங்கட்கிழமை முடிவடைந்த Op Dadu Khas நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 க்கும் 67 க்கும் இடைப்பட்ட வயதுடைய 90 ஆண்களும் 12 பெண்களும் கைது செய்யப்பபட்டனர். இவர்களில் 91 பேர் உள்ளூர் பிரஜைகள். எஞ்சிய 11 பேர் வெளிநாட்டவர்கள் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.
ஓன்லைன் சூதாட்டம், லைசென்ஸின்றி லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் சூதாட்டம் தொடர்புடைய இதர நடவடிக்கைகளை துடைத்தொழிக்கும் நோக்கில் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.
ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் 15 உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் 96 போலீஸ்காரர்களை கொண்டு 87 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.