பினாங்கு, சுங்கை பகாப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளரின் பெயர் நாளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளரின் பெயர் தீர்மானிக்கப்பட்டு விட்டது. பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் உயர் மட்டத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஒற்றுமை அரசாங்க செயலகத்தின் தலைவர் டத்தோ டாக்டர். அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.
நாளை ஜுன் 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.