நாடு முதன்முறையாக டெங்கி தடுப்பூசியை தயாரித்துள்ளது.
Takeda Malaysia எனும் மருந்து நிறுவனம் Qdenga எனும் தடுப்பூசியை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
மலேசியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் புதிய டெங்கி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது, நான்கு வகை டெங்கி கிருமிக்கு எதிராக பாதுகாப்பு வழங்க வல்லதாகும்.
நான்கு வயது அல்லது அதையும் தாண்டியோர் இந்த டெங்கி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரு முறை தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.