ஈப்போ, ஜூன் 12-
கணவனால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மாது ஒருவர், கடும் கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஈப்போ, கம்போங் சிமி, லாலுவான் சிமி என்ற இடத்தில் நிகழ்ந்தது. 48 வயது மாதுவை 56 வயது கணவன் கத்தியால் பல முறை குத்துவதை அந்த தம்பதியரின் 12 வயது நேரில் பார்த்துள்ளார்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.