கோலாலம்பூர், ஜூன் 12-
வழிப்பறி கொள்ளையில் தனது கைப்பையை பறிகொடுத்ததாகவும், இதானால் தனக்கு 7 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டள்ளதாகவும் கூறி போலீசில் பொய் புகார் செய்த குடும்ப மாது ஒருவருக்கு கோலாலம்பூர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,200 வெள்ளி அபராதம் விதித்தது.
35 வயது கரேன் லீ சி நா என்ற அந்த மாது கடந்த ஜுன் 10 ஆம் தேதி காலை 11.20 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ, டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றயவியல் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.