காதலிக்கு காயம் விளைவித்த காதலனுக்கு அபராதம்

கோலாலம்பூர், ஜூன் 12-

மூன்று மாதங்களுக்கு முன்பு தனது காதலியை அடித்து காயப்படுத்தியதுடன், அவருக்கு சொந்தமான மடிக்கணினி, பைப்பேசிகள் மற்றும் இதரப் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

28 வயதுடைய முகமது அடாம் வான் முகமது என்ற அந்த ஆடவர், 30 வயது லீ மே வென் ஆண்ட்ரியா- என்ற தமது காதலிக்கு எதிராக இத்தகைய அரஜாகத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் முதல் தேதி, கோலாலம்பூர் செந்தூலில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் முகமது அடாம் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

WATCH OUR LATEST NEWS