ஜொகூர் பாரு, ஜூன் 12-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பவளப்பாறைத் தீவான பத்து பூத்தே, சிங்கப்பூருக்கு சொந்தமானது என்று கடந்த 2008 ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று தாம் தனிப்பட்ட முறையில் முடிவு செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு இரண்டாவது முறையாக தாம் பிரதமராக பொறுப்பேற்றப்பின்னர், பத்து பூத்தே தீவு மீதான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று தாம் ஒருவரே முடிவு செய்ததாக கூறப்படுவதும் தவறாகும் என்று துன் மகாதீர் விளக்கினார்.
அதேவேளையில் மேல்முறையீடு தொடர்பாக தாம் யாரிமும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் அஸ்லினா கூறுவது அறிவுக்கு பொருந்ததாத விஷயமாகும் என்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.