சுபாங் பெஸ்டாரி, ஜூன் 12-
ஆறு வயது ஆட்டிசம் சிறுவனான காலஞ்சென்ற ஜெய்ன் ராய்யன் அப்துல் மதியின், ஆற்றோரத்தில் பிணமாக கிடந்தது தொடர்பில் வழக்கின் திருப்புமுனையாக அந்த சிறுவனின் தாத்தாவையும், பாட்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இரவு 10 மணியளவில் டாமன்சரா டாமாய், அபார்ட்மெண்ட் இடாமான்- னில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் ஆற்றோரத்தில் அந்த சிறுவன் இறந்து கிடந்தான்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆறு மாதங்களுக்கு பிறகு அந்த சிறுவனின் சொந்த பெற்றோரை போலீசார் கைது செய்துள்ள வேளையில் வழக்கின் திருப்புமுனையாக தாத்தாவையும்,பாட்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த சிறுவனின் தாத்தாவும், பாட்டியும் இன்று புதன்கிழமை சுபாங் பெஸ்டாரி- யில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ உசேன் உமர் கான் தெரிவித்தார்.