சிலாங்கூர், ஜூன் 13-
சிலாங்கூர், கிள்ளான், பண்டாமாறன்-னிலுள்ள பாலர்பள்ளி ஒன்றில், 4 வயது நிரம்பிய தனது மகனை சித்திரவதை செய்த ஆசிரியர் மீதுபோலீஸ் விரைந்து நடவடிக்கையை எடுகக வேண்டுமென பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மே மாதம் 13ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பாலர்பள்ளியிலிருந்து தனது மகனை அழைத்துவந்த போது, அவரது உடம்பில் காது, கன்னம், பின்புறம் முதலானவற்றில் வீக்கங்களும் கீறல்களும் இருந்ததைத் தாம் கண்டதாக, 33 வயதுடைய அந்நபர் தெரிவித்தார்.
காற்சட்டையில் மலம் கழித்ததற்காக, தனது மகனை கையால் அடித்திருந்ததை சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒப்புக்கொண்டிருந்தார்.
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதணையிலும் தனது மகனின் உடலில் காயங்கள் உள்ளதை மருத்துவர் உறுதிபடுத்தியுள்ளார்.
அது குறித்து போலீஸ் புகார் அளித்து 3 வாரங்கள் ஆகியும் இதுவரையில், அந்த ஆசிரியரை கைது செய்து போலீஸ் ஆதாரங்களை திரட்டாதது குறித்து அந்நபர் கவலையை தெரிவித்துள்ளார்.