பேராக், ஜூன் 13-
பேராக், தஞ்ஜோங் மாலிம், ஜாலான் புங்கா ஆங்கேரிக்-க்கிலுள்ள இரண்டு மாடிகள் கொண்ட கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிக்கொண்ட தம்பதியர் மூச்சு திணறலுக்கு ஆளாகினர்.
இன்று அதிகாலை மணி 4.34க்கு அவசர அழைப்பு பெறப்பட்டதை அடுத்து, தஞ்ஜோங் மாலிம் மற்றும் ஸ்லிம் ரிவேர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தை வந்தடைந்த போது, மூவர் உள்ளே சிக்குண்டிருந்ததது கண்டறியப்பட்டது. அதில், கடையினுள் சிக்கியிருந்த வெளிநாட்டு பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்கள், மேல் மாடியில் சிக்குண்டிருந்த கணவரையும் மனைவியையும் மீட்டனர்.
தீயின் கரும்புகைகளை நுகந்திருந்ததால், மூச்சுத்திணறலுக்கு ஆளாகியிருந்த அத்தம்பதியர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளை, காலை மணி 6.18 அளவில், தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக,பேராக் தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.