மலாக்கா, ஜூன் 13-
மலாக்கா, புக்கிட் பியாத்து -விலுள்ள அலோர் காஜா – மலாக்கா தெங்கா – ஜாசின் நெடுஞ்சாலையில் மேற்கொண்ட Operasi Khas Hari Raya Aidiladha திடீர் சோதனையில் விதிமுறைகளை பின்பற்ற தவறிய குற்றத்திற்காக வெளிநாட்டினர் ஓட்டிச் சென்ற 13 வாகனங்களை மலாக்கா சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் கைப்பற்றினர்.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்ட காரணத்திற்காக சம்பந்தப்பட்ட மோட்டார் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மீது 165 சம்மன்கள் உட்பட மொத்தம் 187 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக அதன் இயக்குநர் முஹம்மது பிர்தௌஸ் ஷெரீப் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இதில் மொத்தம் 495 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 220 குற்றப்பதிவுகள் கண்டறியப்பட்டதாக முஹம்மது பிர்தௌஸ் கூறினார்.
மேலும், 30க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு ஆடவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக முஹம்மது பிர்தௌஸ் அறிவித்தார்.