மோட்டார் கைக்கிளில் சென்ற மாதுவிடம் வழிபறி சம்பவம்

ஜொகூர், ஜூன் 13-

ஜொகூர், ஜாலான் சேனாய் உத்தமா 3/3 -யில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, வழிபறி திருடர்களிடம் தனது நகைகளை இழந்ததாக மாது ஒருவர் புகார் அளித்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 வயது அம்மாது கீழே விழுந்து அவரின் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக செனாய் மாநில சட்டமன்ற உறுப்பினர் வோங் போர் யாங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அம்மாது கம்போங் பாரு செனாயிலிருந்து தாமான் செனாய் உத்தாமாவிற்கு தனியொரு நபராக பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றதாக வோங் போர் யாங் கூறினார்.

இதுவரையில், இதுபோன்ற சம்பவம் குறித்து தமது தரப்புக்கு மூன்று முறை புகார் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் இவ்வட்டாரத்தில் கடந்த ஆறு மாதங்களில் இச்சம்பவம் ஏற்பட்டிருப்பதாகவும் வோங் போர் யாங் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS