கூலிம், ஜூன் 13-
நாய் ஒன்றை துன்புறுத்திய குற்றத்திற்காக தோட்டக்காரர் ஒருவருக்கு 2,500 வெள்ளி அபராதம் விதிக்க கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
66 வயது எம்டி யூசுப் மஜித் என்கிற அந்த தோட்டக்காரர் மாஜிஸ்திரேட் ஜமாலியா அப்துல் மனாஃப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 428 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஜூன் 9 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் கூலிம், செகேகொலாஹ் மெனெங்காஹ் கேபங்சான் (SMK) ஜுன்ஜுங்-கில் நாய் ஒன்றின் கால்களை கட்டி மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்று துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.