ஷாஹ் அலாம், ஜூன் 25-
அண்மையில் ஷாஹ் அலாம், புக்கிட் ஜெலுடாங்- கில்மஸ்ஜிட் தெங்கு அம்புவான் பள்ளிவாசலில் பொது மக்கள் நன்கொடையாக வழங்கிய உண்டியல் பணம் களவாடப்பட்டது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் சுல்தானை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் உண்டியல் பணம் களவாடப்பட்டது குறித்து சிலாங்கூர் மாநில சமய இலாகாவான ஜெய்ஸ்-ஸிடம் பள்ளிவாசல் நிர்வாகம், தெரிவிக்கவில்லை..
வசதி குறைந்தவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவக்கூடிய உண்டியல் பணம் களவாடப்பட்டது மிக இழிவான மற்றும் பாவத்திற்குரிய செயலாகும் என்று சுல்தான் வர்ணித்தார் என்று சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.