காஜாங், ஜூன் 26-
சிலாங்கூர், காஜாங்கிலுள்ள பேரங்காடியில், இம்மாதம் 17ஆம் தேதி, 3.2 மில்லியன் வெள்ளி மதிப்புடைய நகைகளை கொள்ளையிட்டிருந்த குற்றவாளிகள், விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என போலிஸ் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
தற்போதைக்கு அச்சம்பவம் குறித்து தமது தரப்பு தொடர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக, சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தூ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள்.
மேலும், இதற்கு முன்பு காஜாங்கிலும் கிலாங் செலாலடனிலும் உள்ள நகைகடைகளில் நிகழ்ந்த இரு கொள்ளைச் சம்பவங்களை வெவ்வேறு கும்பல்கள் மேற்கொண்டிருப்பதாகவும் உசேன் கூறினார்.