கோலாலம்பூர், ஜூன் 26-
தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக டத்தூஸ்ரீ ரம்லான் ஹாருன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை அப்பொறுப்பு நியமிக்க, பேரரசர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவரது நியமனம், இன்று தொடங்கி அமலுக்கு வருவதாகவும், நாட்டின் தலைமை செயலாளர் டான் ஸ்ரீ முகமது ஜூகி அலி அவரது அறிக்கையில் தெரிவித்தார்.
ரம்லான், மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில், நில வள மேலாண்மையில், முதுகலை பட்டமும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வீட்டுவசதி மற்றும் கட்டடத் திட்டமிடல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, புறநகர் மேம்பாட்டு அமைச்சின் தலைமை செயலாளராகவும் வீடமைப்பு ஊராட்சி அமைச்சின் உதவி இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் தேதி, கட்டாய பணி ஓய்வைப் பெற்ற டான் ஸ்ரீ முகமது ஜூகி அலிக்கு மாற்றாக, ரம்லான் அப்பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.