பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26-
முழுமையான ஆய்வை மேற்கொண்ட பின்னரே, அரசாங்கம் இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் டீசலுக்கான உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
ஆகையால், அத்திட்டத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் எனும் சில தரப்பினர்களின் நெருக்குதல்களுக்கு, அரசாங்கம் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என பொருளாதார ஆய்வாளர் இணைப்பேரசிரியர் டாக்டர் முகமது யூசோப் சாரி தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் முயற்சியில், அனைத்துலக அமைப்புகளிடமிருந்து அங்கீகாரத்தை பெருவதற்காக, அந்த திட்டத்தில் அரசாங்கம் மாற்றங்களை செய்யக்கூடாது.
அவ்வாறு செய்தால், உதவித்தொகை மறுசீரமைப்பு நடவடிக்கையின் வழி மிச்சப்படுத்தப்படும் நிதியை, தேவைப்படும் மக்களுக்கு பயன்படுத்துவதோடு நாட்டின் நிதி வளத்தை மேம்படுத்தும் முயற்சிகளும் பயனற்று போகும்.
அது தவிர, அரசாங்கத்தின் நிலையற்ற நிலைப்பாடு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்நாட்டில் முதலீடு செய்வதற்கு தயங்கும் சூழலை ஏற்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையையும் அது பாதிக்கும் என முகமது யூசோப் எச்சரிக்கை விடுத்தார்.