காட்டு எருமையின் மீது மோதி மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்

ஜொகூர் பாரு, ஜூன் 26-

சிங்கப்பூரில் பணிப்புரியும் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காட்டு எருமையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜொகூர் பாருவிற்கு அருகிலுள்ள உலு திரம், ஜாலான் சுங்கை திரமில் நேற்று அதிகாலை 3.40 மணியளவில் 53 வயது உள்ளூர் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் இக்கோர விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.

டெப்ராவ்விலிருந்து சிங்கப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளை சாலையை கடக்க முயற்சித்த எருமையின் மீது மோதி பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக முகமது சோஹைமி கூறினார்.

சவப் பரிசோதனைக்காக பாதிக்கப்பட்ட அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உடல் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முகமது சோஹைமி அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS