ஈப்போ , ஜூன் 26-
திட்டம் ஒன்றை அங்கீகரிப்பதற்கு 750,000 வெள்ளி கையூட்டு பெற்ற சம்பவ தொடர்பில் மாவட்ட பொறியாளர் உட்பட இரண்டு அரசு ஊழியர்களை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு ஈப்போ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
46 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அரசு ஊழியர்கள் இன்று காலை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள மாஜிஸ்திரேட் அதிபா ஹசிமா வஹாப் உத்தரவு பிறப்பித்தார்.
நேற்று இரவு 7.45 மணியளவில் பேராக் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அவ்விரு நபர்களும் விளக்கமளிக்க வந்த வேளை, கைது செய்யப்பட்டதாக பேராக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் அகமது சப்ரி முகமது கூறினார்.
இதுக்குறித்து எஸ்.பி.ஆர்.எம் சட்டம் 2009 -யின் 17(a) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகமது சப்ரி மேலும் தகவல் தெரிவித்தார்.