காஜாங், ஜுன் 26-
கடந்த வாரம் சிலாங்கூர் மற்றும் பேராக் அணிகளிடையே நடந்தேறிய காற்பந்து போட்டியை தொடர்ந்து, பேருந்து மீது கற்களை எரிந்து கலவரத்தில் ஈடுபட்ட இரு காற்பந்து இரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.
சந்தேகிக்கும் அவ்விரு நபர்களும் எவரையும் துன்புறுத்தும் நோக்கில் இச்சம்பவத்தை செய்யவில்லை என்பதுடன் சம்பந்தப்பட்ட அணியின் ஆதரவாளர்களுக்கு வேண்டுமென்றே இடையூறு விளைவிக்க முயற்சித்து இத்தகைய குறும்புத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அவ்விருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக உசேன் உமர் மேலும் தகவல் அளித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சிலாங்கூர் எஃப்.சி மற்றும்பேராக் எஃப்சியின் இரசிகர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டதாகவும் அதில் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் கூறியிருந்தன.