1,500 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காஜாங், ஜுன் 26-

வரும் ஜூலை 14 ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தில் முதல் முறையாக மேற்கொள்ளவிருக்கும் சிலாங்கூர் போலீஸ் நேர்மை அரை மராத்தானில் மொத்தம் 1,500 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த மரோத்தனின் தொடக்க விழா கிள்ளான்,சுல்தான் சுலைமான், மைதானமில் நடைபெறவிருப்பதுடன் சமூகத்தினரிடையே நல்ல நம்பிக்கையை புதுபிக்கும் ஒரு வியூக முயற்சியாகும் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் கூறினார்.

”நேர்மையுடன் ஓடு” என்ற முழக்கத்துடன் நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் நிகழ்வு, பங்கேற்கும் அனைவருக்கும் ஒரு பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாக உசேன் உமர் விளக்கினார்.

இவ்விழா சமுதாயத்துடன் நேர்மறையான உறவுகளை வலுப்படுத்த உதவும் அதே வேளையில் சிலாங்கூர் உறுப்பினர்களிடையே பொறுப்புணர்வுகளையும் நெறிமுறைகளையும் அதிகரிக்க முன்னெடுக்கப்பட்ட முன்முயற்சியாகும் என்று அவர் மேலும் பதிலளித்தார்.

மேலும், சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு உசேன் உமர் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS