கோலாலம்பூர், ஜூன் 26-
தேர்வு எழுத தவறிய மாணவர்கள் மீண்டும் எஸ்.பி.எம் தேர்வு மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுத தவறிய மொத்தம் 399 மாணவர்களை மீண்டும் தேர்வு மேற்கொள்வதற்கு வலியுறுத்தப்பட்டதாக துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ அறிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி ரீதியாக ஊக்குவிப்பும் விழிப்புணர்வும் வழங்குவதன் ஓர் உன்னத நோக்கில் பள்ளி மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சகம் இம்முயற்சியை மேற்கொண்டதாக வோங் கா வோ தெரிவித்தார்.
அம்மாணவர்கள் இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வை எழுதுவதற்கு போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குலிம் பந்தர் பஹாருவின் பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பினர் ரோஸ்லான் ஹாஷிம் எழுப்பிய கேள்விக்கு வோங் கா வோ பதிலளித்தார்.
குடும்ப சிக்கல், பொருளாதார பாதிப்பு, உடல்நல பிரச்னை ஆகிய காரணங்களினால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வை எழுத தவறியதாக அவர் மேலும் விளக்கமளித்தார்.