QR குறியீட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடமிருந்து 10 காசு கொள்ளை

மலாக்கா, ஜுன் 26-

மலாக்கா, ஜலான் துன் அலியில் உள்ள ஒரு உணவகத்தில் QR குறியீட்டை பயன்படுத்தி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடமிருந்து சம்பந்தப்பட்ட வியாபாரிகள் கூடுதலாக 10 காசு கட்டணம் வசூலிப்பதாக மாநில உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகம் அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு சதவீதம் வரையில் வசூலிப்பது குறித்து பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்க பெற்றதாக மலாக்கா, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழக்கை செலவினங்களின் இயக்குநர் நோரேனா ஜாபர் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகள் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக ஒரு விசாரணை அறிக்கையை தமது தரப்பு திறந்திருப்பதாகவும் நோரேனா ஜாபர் கூறினார்.

கூடுதலாக 10 காசு வரையில் வசூலிப்பது பொதுமக்களை பெரிதளவில் பாதிப்பதாகவும் சம்பந்தப்பட்ட உணவு வளாகம் சொந்த விருப்பத்திற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களின் QR குறியீட்டிலிருந்து அந்த தொகையை பெற்று கொள்வதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக நோரேனா ஜாபர் விளக்கமளித்தார்.

WATCH OUR LATEST NEWS