மூவார், ஜூன் 26-
கடந்த ஆண்டு, தனது உடன்பிறந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இளைஞன் ஒருவன் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
19 வயதுடைய அவ்விளைஞன் நீதிபதி அபுபக்கர் மனாத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 (3) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு மே 18 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஜொகூர், பத்து பஹாட், ஆயர் ஹித்தாம் -மில் உள்ள ஒரு வீட்டில் தனது 13 வயதுடைய தங்கையை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.