கிள்ளான், ஜூன் 26-
TR Gang என்ற கும்பலை சேர்ந்தவர்களாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 20 பேர் மீதான வழக்கு விசாரணையை ஷா அலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதற்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் 177A (1) பிரிவின் கீழ் இவ்வழக்கு குறித்து துணை அரசு வழக்கறிஞரான Lina ஹனினி இஸ்மாயில் சமர்பித்த விண்ணப்பத்தை அனுமதித்து நீதிபதி அஹ்மத் பைசாத் யஹாயா இத்தீர்ப்பை பிறப்பித்தார்.
கடந்த மே 29 ஆம் தேதி, கடந்த ஐந்து ஆண்டுக்காலமாக TR Gang கும்பலில் அந்த 20 பேரும் ஈடுபட்டு வந்ததாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
அதில் 26க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய 18 இந்தியர்கள் உட்பட 1 மலாய் மற்றும் சீன நபர்களும் அடங்குவர் என்று தெரியவந்துள்ளது.