வழக்கறிஞர் போல ஆள்மாறாட்டம் புரிந்து பொய் சாட்சியளித்த குமாஸ்தா

டமான்சாரா, ஜூன் 26-

ஒரு வழக்கறிஞராக ஆள்மாறாட்டம் புரிந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பொய்யான தகவலை அளித்த குற்றத்திற்காக ஒரு சட்ட நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிப்புரியும் ஓர் இந்திய மூதாட்டி கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

63 வயது K மரகதம் என்ற அந்த குமாஸ்தா மாஜிஸ்திரேட் நூருல் இஸ்ஸா ஷஹாருதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2,500 வெள்ளி அபராதம் அல்லது 6 மாத சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 37(1) பிரிவின் கீழ் அக்குமாஸ்தால் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி கோலாலம்பூர், புக்கிட் டமான்சாரா -வில் உள்ள ஒரு உணவகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது வங்கி ஆவணங்கள் தொடர்புடைய தவறான ஆதாரங்களை சமர்பித்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS